பிரியங்கா சோப்ராவின் ஸ்டைலை யோகி பாபுவுடன் ஒப்பிட்டு கிண்டல்

அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரியங்கா சோப்ரா வெளிப்படுத்திய் ஸ்டைலை, நடிகர் யோகி பாபுவுடன் ஒப்பிட்டு மீம்ஸ் உருவாக்கியுள்ளனர்.

நடப்பு 2019-ம் ஆண்டுக்கான ‘மெட் கலா’ நிகழ்ச்சி, நியூயார்க் நகரில் நடைபெற்றது. இதில் நிக் ஜோன்ஸ், தனது மனைவி பிரியங்கா சோப்ராவுடன் கலந்து கொண்டார். இந்தியாவிலிருந்து தீபிகா படுகோனும் பங்கேற்றார்.

இதில் பிரியங்கா சோப்ரா அணிந்திருந்த உடை, அவரது ஹேர் ஸ்டைல் மற்றும் மேக்கப் ஆகியன கேலி, கிண்டலுக்கு ஆளாகியுள்ளன.

இதை சமூக வலைதளங்களில் பலரும் இதை விமர்சித்து வருகின்றனர்.

பிரியங்காவின் புகைப்படத்தை யோகி பாபுவின் புகைப்படத்துடன் ஒப்பிட்டு ஒருவர் மீம் ஒன்றை உருவாக்கியுள்ளார். அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் யோகி பாபுவும் அந்த மீமை தன்னுடைய ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.


Leave a Reply