தேனி தொகுதியில் வாக்கு இயந்திரங்கள் மாற்றப்பட்டதா? சிறப்பு தேர்தல் அதிகாரியை நியமிக்க ஸ்டாலின் கோரிக்கை

கோவையில் இருந்து தேனிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டதாக கூறியுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இவ்விவகாரத்தில் சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரியை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

 

கோவை பகுதியில் இருந்து 50 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், நேற்றிரவு தேனி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் பரவியது. இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

 

அதிகாரிகளின் செயல்பாடு ஆளுங்கட்சிக்கு ஆதரவாக, ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது. தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையிழந்து விட்டனர். சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தேர்தலை நடத்த, அவர் தடுமாறுகிறார். வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பதில் தமிழகத்தில் தொடர்ந்து முறைகேடுகள் நிகழ்கின்றன.

 

தேர்தல் ஆணையம், 46 வாக்குச்சாவடிகளில் தவறு என்ன என்பது பற்றிய விவரங்கள் அனைத்தையும் வெளியிட வேண்டும். மறுவாக்குப்பதிவு பரிந்துரைத்த விவரங்கள் அனைத்தையும் வெளியிட வேண்டும். மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடாத நிலையில் ரகசியமாக வாக்கு இயந்திரங்களை கொண்டு சென்றது ஏன்?

 

வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பதில் தமிழகத்தில் தொடர்ந்து முறைகேடுகள் நிகழ்கின்றன. மாநில சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரியை நியமித்து, வாக்குப்பதிவு இயந்திரங்களையும் வாக்குப்பதிவு மையங்களையும் முழுமையான அளவிற்கு பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

 

இதனிடையே, இது குறித்து கோவை வருவாய் அலுவலர் சவுந்தர்ராஜன் கூறுகையில், வாக்குப்பதிவு ஆகாத 50 வாக்குப்பதிவு இயந்திரங்களே மாற்றப்பட்டன. பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டராங் ரூமில் வைக்கப்பட்டுள்ளன’ என்றார்.


Leave a Reply