பாம்பன் பகுதியில் பதுக்கிய 1,634 மது பாட்டில்களை பறிமுதல்

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் சட்ட விரோதமாக விற்பனைக்கு பதுக்கிய 1,634 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் மண்டபம் இன்ஸ்பெக்டர் மாய ராஜலட்சுமி தலைமையில் போலீசார் ஏப்.25 காலையில் ரோந்து சென்றனர். பாம்பன் விவேகானந்தர் நகர் பகுதியில் ரோந்து சென்ற போது குறுகிய பாதையில் சந்தேகத்திற்கிடமாக இருவர் நின்று கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை நெருங்கியதும் தப்பி ஓடினர். அங்கு 1,286 மது பாட்டில்கள், 348 பீர் பாட்டில்கள் கேட்பாரற்று இருந்ததை கைப்பற்றினர். விசாரணையில், சட்ட விரோதமான விற்பனைக்கு மது பாட்டிலகள் பதுக்கி வைத்தது என தெரிந்தது. இது தொடர்பாக தப்பியோடிய ரவி, முருகேசன் ஆகியோர் பாம்பன் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.


Leave a Reply