உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில், பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
மக்களவை தேர்தலில், உத்தர பிரதேச மாநிலம் தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுகிறார். இங்கு, மே 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில்பிரதமர் மோடி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அப்போது, ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ்குமார், சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, சிரோமனி அகாலிதளம் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ்சிங் பாதல், லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் மற்றும் கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டனர்.
வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் அஜய் ராய், சமாஜ்வாடி கட்சி சார்பில் ஷாலினி யாதவ் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகள் :
த.வெ.க. தலைவர் விஜயை விமர்சித்த முதல்வர்?
சீமான் பிறந்தநாளுக்கு திருமாவளவன் வாழ்த்து!
முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் மாரடைப்பால் மரணம்..!
தவெக? திமுக? கூட்டணி குறித்து அதிரடியாக தெரிவித்த திருமாவளவன்!
தமிழக வெற்றி கழக நிர்வாகி மீது கொலை மிரட்டல் புகார்..!
விஜய் உடன் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பா?