நாடாளுமன்ற தேர்தலில் வாராணசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி, தனது வேட்புமனுவை நாளை தாக்கல் செய்கிறார். முன்னதாக, இன்று அங்கு பிரசார கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார்.
இன்று பிற்பகல் 3:00 மணியளவில் சாலை மார்க்கமாக பிரதமர் மோடி பேரணி செல்கிறார். தாசாஸ்வமேத் நதிமுகத்துவார பகுதி வரை, இந்த பேரணி நடைபெறுகிறது. அதை தொடர்ந்து கங்கை நதியில் ஆரத்தி எடுத்து மோடி வழிபட உள்ளார். பின்னர் வாராணசி தொகுதியில் நாளை வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.
முன்னதாக , பாஜக தொண்டர்களுடன் காலையில் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாகவும், அதை தொடர்ந்து கால பைரவர் கோயிலில் வழிபாடு நடத்த உள்ளதாகவும் பாஜக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் செய்திகள் :
மஹா விஷ்ணு விவகாரம், பாஜகவின் சதி: திமுக
தத்ரூபமாக 45 மாதங்களாக செதுக்கப்பட்ட அஷ்டோத்திர 108 சதலிங்கம், பள்ளி கொண்ட பெருமாள் சிலைகள்
பாலியல் புகார்..இன்று கூடும் நடிகர் சங்க பொதுக்குழு
விஜய்யின் தவெகவிற்கு அங்கீகாரம்..!
சென்னையில் மிதிவண்டி பாதை எங்கே? அன்புமணி ராமதாஸ் கேள்வி..!
சீமான் மீது எஸ்சி., எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்கு