பிளே-ஆப் சுற்றில் நுழைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்! பரபரப்பான ஆட்டத்தில் ஐதராபாத்தை வென்று அசத்தல்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : Agency


ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு நடந்த பரபரப்பான ஆட்டத்தில்  ஐதராபாத் அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வென்று,  பிளே-ஆப் சுற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுதி பெற்றது.
ஐ.பி.எல். தொடரின் 41ஆவது லீக் ஆட்டத்தில்  தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி, சன்ரைஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற சென்னை அணி  கேட்டுக் கொண்டதை அடுத்து ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது.
அந்த அணி 20 ஓவர் முடிவில், மூன்று விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. டேவிட் வார்னர் 57 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மனீஷ் பாண்டே 83(49)  களத்தில் இருந்தனர். சென்னை தரப்பில் ஹர்பஜன் இரண்டு விக்கெட் கைப்பற்றினர்.
அடுத்து,176 ரன்கள் இலக்குடன் களம் புகுந்தது சென்னை அணி. பிளெஸ்ஸிஸ் 1(7) ரன் எடுத்த நிலையில் ரன்-அவுட் ஆகி அதிர்ச்சி தந்தாஅர். அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா மற்றும் ஷேன் வாட்சன் அதிரடி காட்டினர்.  ரெய்னா 38(24) ரன்கள் எடுத்து வெளியேறினார்.  சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வாட்சன் 53 பந்துகளில் 96 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.  அம்பதி ராயுடு 21(25) ரன்களுடன் அவுட் ஆனர்.
கடைசியில், 19.5 ஓவரில் சென்னை அணி 176 ரன்கள் எடுத்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 16 புள்ளிகளை பெற்று ஐபிஎல் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை மீண்டும் பிடித்தது.  அத்துடன், அடுத்த சுற்றான பிளேஆப்  சுற்றுக்கு தகுதி பெற்றது.

Leave a Reply