கனமழை வரும் முன் தூர்வாரப்படுமா ? சூலூர் குளம்

Publish by: செய்திப் பிரிவு --- Photo : -கோவை விஜயகுமார்


கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட பகுதியில் இருந்து அவினாசி செல்லும் சாலையில் 200 க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பெரியகுளம்,சிறுகுளம் உள்ளது.இக்குளம் சோழர் பரம்பரையை சேர்ந்த ராஜராஜ சோழன் ஆட்சி காலத்தில் 200 ஏக்கரில் காடாக இருந்ததை தூர் வாரி சூலூர்,கருமத்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் எதிர்கால குடிநீர்,விவசாய தேவைகளை கருத்தில் கொண்டு குளங்களாக மாற்றப்பட்டுள்ளது.இதனால் இன்றைய காலகட்டங்களில் இப்பகுதி மக்களின் குடிநீர்,விவசாயத்தேவைகள் பூர்த்தியடைந்து வருகிறது.

தூர்வாரப்படாமல் ஆகாயத்தாமரைகளால் ஆக்கிரமித்து உள்ளது
தூர்வாரப்படாமல் ஆகாயத்தாமரைகளால் ஆக்கிரமித்து உள்ளது

இக்குளத்தினால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து உள்ளது.நாளடைவில் இக்குளமானது தூர்வாரப்படாமல் ஆகாயத்தாமரைகளால் ஆக்கிரமித்து குளமானது வறண்டு வருகிறது.ஆகாயத்தாமரை செடியானது ஒரு நாளைக்கு 10 முதல் 12 லிட்டர் தண்ணீரை உறிஞ்சும் வல்லமை பெற்றது.தமிழகம் முழுவதும் தற்போது கோடை மழை துவங்கியுள்ள நிலையில் கனமழை வரும் முன் இக்குளத்தை தூர் வாரினால் எதிர்காலத்தில் விவசாய தேவைகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். மேலும்,இங்கு செயல்பட்டு வந்த படகு குழாம் சூலூர் பேரூராட்சியின் மெத்தனப்போக்காலும்,நிர்வாக சீர்கேட்டினாலும் காலப்போக்கில் குழாம் செயல்பட வில்லை.அதனால் இக்குளத்தை கனமழை வரும் முன் இக்குளத்தை தூர்வாரினால் இப்பகுதியின் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படாமலும்,குழாம் மீண்டும் செயல்பட துவங்கினால் பேரூராட்சிக்கு வருமானம் வரக்கூடிய வாய்ப்பு இருப்பதாலும் இப்பகுதி மக்களின் விவசாயத்தை காக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Leave a Reply