4 தொகுதி இடைத்தோ்தல்- அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

Publish by: நமது நிருபா் --- Photo : அதிமுக கட்சி


தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டமன்றத் தொகுதிகளில், 18 தொகுதிகளுக்கு பாராளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து கடந்த 18-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. விடுபட்ட சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி மற்றும் ஒட்டப்பிடாரம் (தனி) ஆகிய 4 தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது.

 

அதிமுக வேட்பாளா்கள்

 

இந்நிலையில், 4 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்களை கட்சியின் பொதுச்செயலாளர் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று அறிவித்துள்ளனர். வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-

 

அதிமுக தலைமை கழகம் அறிவிப்பு

 

சூலூர்- வி.பி.கந்தசாமி, கோவை புறநகர் மாவட்ட அம்மா பேரவை தலைவர். அரவக்குறிச்சி- வி.வி.செந்தில்நாதன், கரூர் மாவட்ட இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர் திருப்பரங்குன்றம் – எஸ்.முனியாண்டி, அவனியாபுரம் பகுதி அதிமுக செயலாளர். ஒட்டப்பிடாரம் (தனி) – பெ.மோகன், முன்னாள் எம்எல்ஏ, தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக துணை செயலாளர்.


Leave a Reply