தமிழகம், புதுச்சேரியில் தொடங்கியது வாக்குப்பதிவு! வரிசையில் காத்திருந்து ஓட்டுப்போடும் குடிமக்கள்!

Publish by: --- Photo :


தமிழத்தில் உள்ள 38 மக்களவை தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு, காலை 7:00 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

 

மதுரை தொகுதியை தவிர, மற்ற தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சித்திரைத் திருவிழா நடைபெறுவதால், மதுரையில் மட்டும் இரவு 8 மணிவரை வாக்குப்பதிவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே ஆண்களும், பெண்களும் ஆர்வமுடன் வந்து வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு காரணமாக, வாக்குப்பதிவு தாமதமாகின.

இன்றைய தேர்தலில்,  தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 98 லட்சத்து 69 ஆயிரத்து 758 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள். 2,95,94,923  ஆண் வாக்காளர்களும் 3,02,69,045 பெண் வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிகம். 5,940  பேர் மூன்றாம் பாலினத்தவர்.


Leave a Reply