உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் யாருக்கு வாய்ப்பு? இன்று வெளியாகிறது பட்டியல்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி, இன்று மும்பையில் அறிவிக்கப்படுகிறது.

 

கிரிக்கெட் ரசிகர் ஆவலோடு எதிர்நோக்கும் 12ஆவது உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள்  இங்கிலாந்தில் மே 30 ஆம் தேதி  தொடங்கி ஜூலை 14 வரை நடக்கிறது. இதில் இந்தியா, தற்போதைய சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் அணிகள் பங்கேற்கின்றன.

 

இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இன்று அறிவிக்கப்படுகின்றன.

 

இதற்காக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தேர்வுக்குழு கூட்டம் மும்பையில் இன்று பிற்பகல் நடக்கிறது. தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையில் தேர்வாளர்கள் கூடி ஆலோசித்து அணியை அறிவிக்க உள்ளனர்.

 

கீப்பர் இடத்துக்கு ரிஷாப் பான்டுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. லோகேஷ் ராகுல் 3 ஆவது தொடக்க வீரராக இடம் பெறக்கூடும். அம்பத்தி ராயுடு, ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர், ஸ்ரேயாஸ் அய்யர், உமேஷ் யாதவ், கலீல் அகமது, இஷாந்த் ஷர்மா ஆகியோர் இடையே அணியில் இடம் பெற போட்டி நிலவுகிறது.

 


Leave a Reply