உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு! தமிழக வீரர்கள் இருவருக்கு கிடைத்தது வாய்ப்பு

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு, விராத் கோலி தலைமையிலான  இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

 

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, வரும் மே 30-ம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற உள்ளது.

 

இந்த தொடருக்கு இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் விளையாடுகின்றன. லீக் சுற்றில், ஒவ்வொரு அணியும் தலா 9 போட்டிகளில் விளையாட உள்ளன. இதில், தகுதிபெறும் அணிகள்,  அரை இறுதிக்கு முன்னேறும்.

 

இந்திய அணி தனது முதல் போட்டியில், தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. அதேபோல், பாகிஸ்தானை ஜூன் 16-ஆம் தேதி எதிர்கொள்கிறது.

 

இந்நிலையில், விராத் கோலி தலைமையிலான இந்திய அணியை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், இன்று மும்பையில் வெளியிட்டது.

 

இதில் மகேந்திர சிங் தோனி, ஷிகர் தவான், ரோஹித் சர்மா, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், சாஹல், குல்தீப், முகமது ஷமி, பும்ரா, ஜடேஜா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

 

உலகக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியில் தமிழக வீரர்கள் விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.


Leave a Reply