தேவாலயங்களில் தோ்தல் பிரச்சாரம் முழு மூச்சு! தோ்தல் ஆணையத்தின் விதி என்ன ஆச்சு?

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினரின் தேர்தல் பிரச்சாரம் களை கட்டியுள்ளது.அதன் ஒரு பகுதியாக கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகையான குருத்தோலை தினமான இன்று அரசியல் கட்சியினர் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று முடிந்து வெளியே வரும் மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி இன்று கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உதகை செல்லும் சாலையில் உள்ள சி.எஸ்.ஐ கிறிஸ்தவ தேவாலத்திலிருந்து வெளியே வரும் பொதுமக்களிடம் திமுக சார்பில் நீலகிரி வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து நகர செயலாளர் முகமது யூனூஸ் தலைமையிலான திமுக – வினர் ஒருபுறமாக நின்றுஉதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர்.மற்றொரு புறம் அமமுக வேட்பாளர் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ராமசாமியை ஆதரித்து பரிசுப்பெட்டகம் சின்னத்திற்கு அக்கட்சி நிர்வாகிகள் வாக்குகளை சேகரித்தனர். வழிபாடு தலங்களில் அரசியல் கட்சியினர் தோ்தல் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபடக்கூடாது என விதி நடைமுறையில் உள்ளது. இந்தநிலையில் இரு அரசியல் கட்சியினரும் மாறி மாறி தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளை சேகரித்தது வருகின்றனர்.

கோவை விஜயகுமார்


Leave a Reply