ராமநாதபுரம் மாவட்டம் , திருவாடானை தாலுகா திருவாடானை அருகே சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் விவசாயிகளுக்கு 2016 – 17 மற்றும் 2018 – 19 க்கு 100 சதவீதம் பயிர் காப்பீடு வழங்கவில்லை என கடும் கோபத்தில் இருந்து வந்தனர். இதனால் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை பொதுமக்கள் கடுமையாக விமர்சித்தும் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் தங்களது வீடுகளிலும் கிராமங்களில் கறுப்புக்கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வந்தார்கள். இந்நிலையில் அதிமுக கூட்டணி கட்சியின் பிஜேபி கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மற்றும் சில நிர்வாகிகள் திருவாடானை தாலுகா பகுதிகளில் வாக்கு சேகரிக்க சென்ற போது கூகுடி கிராமத்தில் வாக்கு சேரிக்க சென்ற கூட்டணி கட்சி வேட்பாளர், முக்கிய பிரமுகர்கள், மற் கம் அமைச்சரையும் ஊருக்குள் விடாமல் தடுத்து நிறுத்தி எங்களுக்கு வழங்கவேண்டிய பயிர் காப்பீடு இழப்பீடு தொகை என்ன ஆச்சு என்று கேட்டதில் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றியதால் வேட்பாளர் நயினார் நாகேந்திரன் அமைச்சர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் கூகுடி கிராமத்தில் வாக்கு சேகரிக்க முடியாமல் திரும்பிச் சென்றனர்.
இந்நிலையில் அப்பகுதியில் பிரச்சார பரப்புரையை முடித்துவிட்டு தொண்டி பகுதியில் மகாசக்தி புரம் தெருவில் வாக்கு சேகரிக்க சென்ற போது அங்கு கூடியிருந்த மீனவ மக்கள் எங்களது குடிநீர் பிரச்சினையை நீண்ட நாட்களாக கூறி ஒவ்வொரு முறையும் வேட்பாளர் வரும்போது செய்து தருவதாக சொல்வதோடு சரி இதுவரை யாரும் செய்யவில்லை, மேலும் எங்களது ரேசன் கடையும் சரிவர செயல்படவில்லை. இதை சரி செய்து தாருங்கள் என்று முற்றுகையிட்டனர்.
ஆனால் அதை அமைச்சர் மணிகண்டன், வேட்பாளர் நயினார் நாகேந்திரன் செவி கொடுத்துக் கேட்காமல் தங்கள் வேலையை அதாவது பொன்னாடை போற்றுதும் நிர்வாகிகள் சந்திப்புக்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தனர். இதனால் ஆத்திர அடைந்த பெண்கள், உங்களுக்கு நாங்கள் வாக்களிக்க மாட்டோம். நீங்கள் திரும்பிச் செல்லுங்கள் என்று கோஷம் எழுப்பியதால், அங்கு வாக்கு சேகரிக்க முடியாமல் திரும்பினர். இதனால் பிஜேபி கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு திருவாடானை பகுதியில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அனல் ஆனந்த் ஆடானை