கார்ப்பரேட் கம்பெனிகளுக்கான  மோடி அரசு –  கொக்கரிக்கும் வைக்கோ

தமிழகத்தில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் வாட்டி வதைக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்க துவங்கியுள்ளது. இந்த நிலையில் இன்று கோவையில் பெரியநாயக்கன் பாளையம்,காரமடை,மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக கூட்டணியின் நீலகிரி தொகுதி வேட்பாளர் ஆ.ராசா,கோவை கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வை.கோ பரப்புரை மேற்கொண்டார்.அப்போது,பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் கூடலூர் முன்னாள் பேரூராட்சி தலைவர் அறிவரசு தலைமையில் கூட்டத்தில் பேசிய வை.கோ புல்வாமா தாக்குதலில் பலியான 41 எல்லைப்பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்கள் சிந்திய ரத்தத்துளிகளை மனதில் நினைத்து வாக்குச்சாவடிக்குள் செல்லுங்கள்.முதன்முறை வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு இது தான் எனது வேண்டுகோள் என பிரதமர் மோடி பேசியதற்கு கண்டனம் தெரிவித்தார்.மேலும்,ஜனநாயக நாட்டில் பிரதமர் மோடி இவ்வாறு பேசியது முறையல்ல என்றும்,நாட்டின் முப்படை வீரர்களும் 136 கோடி இந்திய மக்களுக்கும் காவல் தெய்வங்கள்,சாதி,மத,பேதங்களை கடந்து இந்திய மக்களை காக்கும் காவல் காக்கும் தியாகிகள்,அவர்கள் எந்த கட்சிக்கும் சொந்தமானவர்கள் அல்ல என்றும் குற்றஞ்சாட்டினார்.அதே நேரத்தில் மத்தியில் ஆளும் மோடி அரசு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கான அரசு என்பதற்கு உதாரணம் அந்நிறுவனங்களுக்கு 2.42 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்திருப்பதாகவும்,5 லட்சம் கோடி அளவிற்கு வரிச்சலுகை செய்திருப்பதாகவும்,விஜய் மல்லையா,நீரவ் மோடி,விக்ரம் கோத்தாரி,நிக்கில் சர்வேஸ்வரன் போன்ற தொழிலதிபர்கள் வங்கிகளில் மோசடி செய்து தப்பிச்செல்ல செய்தது மோடி என்றும்,இப்படி 23 பேர் 90 ஆயிரம் கோடி அளவிற்கு வங்கிகளில் மோசடி செய்து விட்டு வெளிநாடு தப்பிச்செல்ல வழிவகை செய்த மோடி அரசு தமிழகத்தை வஞ்சிப்பதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் கோடிகளை குவிப்பதற்கு வழிவகை செய்தது மோடி அரசு தான் எனவும் குற்றஞ்சாட்டினார்.பின்னர்,உலகம் அறிந்த பொருளாதார நிபுணர் ரகுராம் ராஜன் ராகுலின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள ஏழைக்குடும்பங்களுக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாயை கொடுப்பதை வரவேற்றுள்ளதாகவும்,அதை முறையான திட்டமிடல் இருந்தால் கொடுக்க இயலும் எனவும்,தனக்கிருக்கும் கவலை இந்தியாவில் ஜனநாயக ஆபத்து உள்ளது, மோடியிடமிருந்து ஜனநாயகத்தை காக்க வேண்டும் என ரகுராம் ராஜன் பேசியிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

மேலும்,தமிழகத்தை பொறுத்த வரை 400 கோடி ரூபாய் அளவிற்கு பருப்பு ஊழல்,ஆம்னி பேருந்து ஊழல்,மேம்பாலம் கட்டுவதிலே ஊழல்,பொதுப்பணித்துறையில் ஊழல் என பல்வேறு துறைகளில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி இருப்பதனால் தான் அவர்களுக்கு மத்திய அரசை எதிர்க்கின்ற சக்தியில்லை,வரக்கூடிந ஆபத்துகளை தடுக்கும் சக்தியில்லை என்றும்,இந்துக்கள் ஆலயங்களுக்கு சென்று வழிபடுவதை திமுக கூட்டணி மகிழ்ச்சியோடு வரவேற்று வாழ்த்துவதாகவும்,ஸ்டெரிலைட் ஆலை போராட்டத்தின் போது தமிழக அரசு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கைக்கூலிகளாய் செயல்பட்டு 13 அப்பாவி மக்களை கொன்று குவித்ததாகவும் குற்றஞ்சாட்டினார்.

முன்னதாக பேசிய நீலகிரி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா தான் ஒன்றும் இந்த தொகுதிக்கு புதியவன் இல்லை,கடந்த 2009 லிருந்து 2014 வரை இத்தொகுதியின் எம்.பியாகவும்,சிறிது காலம் மத்திய அமைச்சராகவும் பணிபுரிந்த பொழுது தனது நடவடிக்கையை பார்த்திருப்பீர்கள்,அதனை வைத்து தனக்கு மீண்டும் ஒருமுறை வாக்களியுங்கள் என்றும் பொதுமக்களிடையே கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் கோவை கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன்,திமுக மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட தொண்டர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

கோவை- விஜயகுமார்


Leave a Reply