4 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு

திருப்பரங்குன்றம், சூலூர் உள்ளிட்ட 4 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை அக்கட்சி இன்று வெளியிட்டுள்ளது.

 

தமிழகத்தில் வரும் 18ஆம் தேதி நடைபெறும் மக்களவை தேர்தலுடன், காலியாகவுள்ள 22 சட்டப்பேரவை தொகுதிகளில் 18க்கு மட்டும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

 

வழக்கு நிலுவை காரணமாக அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படாமல் இருந்தது. இதற்கிடையே சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. கனகராஜ் மாரடைப்பால் காலமானதால் அந்த தொகுதியும் காலியானது.

 

இச்சூழலில், மக்களவைக்கு ஏழாவது மற்றும் இறுதிகட்ட தேர்தல் நடக்கும் மே 19ம் தேதி, இந்த 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

 

இந்நிலையில், நான்கு சட்டப்பேரவை தொகுதிக்கான திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது.

 

அதன்படி அரவக்குறிச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, திருப்பரங்குன்றத்தில் டாக்டர் சரவணன்,  ஒட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் சண்முகையா, சூலூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி ஆகியோர் திமுக வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

 

திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


Leave a Reply