கோவை சூலூர் அருகே 3.80 கோடி பறிமுதல்… தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி..! .

3.80 crore confiscated ...

தமிழகத்தில் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் 50 ஆயிரம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் கொண்டு செல்லப்படும் பணம்,நகை,பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் இன்று திருப்பூர் சேல்ஸ் டேக்ஸ் ஆய்வாளர் மலர்விழி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் காரணம்பேட்டை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.அப்போது,அவ்வழியே வந்த தனியார் வங்கி ஏ.டி.எம்.ல் பணம் நிரப்பும் வாகனத்தை சோதனை செய்ததில் அதில் கட்டுகட்டாக ரூ.3.80 கோடி பணம் இருந்ததும்,பணத்தை கோவை,திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஐசிஐசிஐ,ஆக்ஸிஸ் வங்கி ஏடிஎம்மில் நிரப்புவதற்காக கொண்டு சென்றதும்,அவற்றிற்கு உரிய ஆவணங்கள் இல்லாததும் விசாரணையில் தெரிய வந்தது.உடனே,அப்பணத்தை கைப்பற்றிய தேர்தல் பறக்கும் படையினர் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.பின்னர்,பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.தேர்தல் பறக்கும் படையினர் ஒரே நாளில் 3.80 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை செய்தியாளர் -விஜயகுமார்


Leave a Reply