--- --:--:-- --

கழிவறைத் தொட்டிக்குள் தவறி விழுந்து 2 சிறுமிகள் பரிதாபமாக பலி..!

6

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே கழிவறைத் தொட்டிக்குள் தவறி விழுந்து 2 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஈஸ்வரன் என்பவரது மகள் நிகிதா செய்யும் அதே பகுதியில் வசித்த சுபஸ்ரீ கழிவறை தொட்டியின் மேல் விளையாடிக்கொண்டிருந்தனர்.

 

அந்த தொட்டியில் மூடி பழுதாக இருந்ததாக தெரிகிறது. திடீரென்று மூடி உடைந்து இரண்டு சிறுமிகளும் தொட்டிக்குள் விழுந்து நீரில் மூழ்கினார். பின்னர் இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

 

செல்லும் வழியில் ஒரு சிறுமியும் சிகிச்சையின் போது மற்றொரு சிறுமி உயிரிழந்தது தொடர்பாக பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon