உத்திரபிரதேசத்தில் மே 31வரை 144 தடை..!
கொரொனா தொற்று பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக உத்திரபிரதேசத்தில் கௌதம புத்தாவில் இன்று முதல் 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கொரொனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 ஆயிரத்து 167 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக கௌதம புத்தா நகரில் இன்று முதல் மே 31-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்களில் உயரதிகாரிகளின் அனுமதியின்றி யாரும் போராட்டங்கள், உண்ணாவிரதம் போராட்டம் நடத்த அனுமதி கிடையாது. மேலும் பொது இடங்களில் பூஜை மற்றும் நமாஸ் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.





