பிரியாணியும் பரோட்டாவும் சாப்பிட்ட 12 வயது சிறுவன் உயிரிழப்பு..!
சென்னை துரைப்பாக்கத்தில் பிரியாணியும் பரோட்டாவும் சாப்பிட்ட 12 வயது சிறுவன் வயிற்று வலி ஏற்பட்டு இறந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த சிறுவன் வெள்ளிக்கிழமை இரவு பிரியாணியையும் அதனைத் தொடர்ந்து பரோட்டாவும் சாப்பிட்டுள்ளார்.
சிறிது நேரத்தில் வயிற்று வலியால் துடித்த சிறுவன் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் வீடு வந்துள்ளான். நள்ளிரவில் மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனை அழைத்து செல்லப்பட்ட சிறுவன் வழியிலேயே இறந்து உள்ளான். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே இறப்புக்கான காரணம் தெரியவரும் என கூறப்படுகிறது.






