உலக குத்துச்சண்டையில் பதக்கம் உறுதி! அரையிறுதியில் மேரி கோம்!
மகளிர் உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். ரஷ்யாவில் உள்ள ஒரு நகரில் நடைபெற்ற காலிறுதி போட்டியில் கொலம்பியாவின் வீராங்கனைகள் எதிர்கொண்டவர் ஐந்துக்கு பூஜ்ஜியம் என்ற புள்ளி கணக்கில் அபார வெற்றியைப் பெற்றார். இதன்மூலம் அரையிறுதிக்கு முன்னேறிய தோடு பதக்கம் பெறுவது உறுதி செய்துள்ளார்.
உலகக்கோப்பை குத்துச்சண்டை போட்டியில் ஆறுமுறை தங்கப் பதக்கமும் ஒருமுறை வெள்ளிப் பதக்கமும் வென்று உள்ள மேரி கோம் தற்போது எட்டாவது பதக்கத்தை பெற உள்ளார். வரும் சனிக்கிழமை நடைபெற உள்ள அரையிறுதி போட்டியில் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றுள்ள துருக்கி நாட்டு வீராங்கனையை எதிர்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




