--- --:--:-- --

சிபிஐ பறிமுதல் செய்த தங்கத்தில் 103 கிலோ தங்கம் எங்கே..!

5

சிபிஐ பறிமுதல் செய்த தங்கத்தில் 103 கிலோ காணாமல் போனது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்க சிபிசிஐடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு சட்டவிரோத தங்க இறக்குமதி குறித்து சென்னை சுரானா நிறுவனத்தில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள் நான் 400.47 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

 

அந்த நிறுவனத்தின் லாக்கர்களில் வைத்து சீல் வைக்கப்பட்டது. பின்னர் சுரானா நிறுவனம் பல்வேறு வங்கிகளிடம்பெற்ற 1,160 கோடி ரூபாயை ஈடுகட்ட பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை சிறப்பு அதிகாரியிடம் வழங்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

அதன்படி லாக்கர்களில் இருந்து தங்கத்தை எடைபோட பிறகு 103.864 கிலோ தங்கம் மாயம் ஆகியிருந்தது. மாயமான தங்கத்தை ஒப்படைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சிறப்பு அதிகாரி வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதி பிரகாஷ் இந்த விவகாரம் ஹாலிவுட் திரைப் படத்தை மிஞ்சும் அளவுக்கு இருப்பதாகவும் சிபிஐ மீது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து எஸ்பி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி மூலம் விசாரித்து 6 மாதங்களில் இறுதி அறிக்கை அளிக்க சிபிசிஐடிக்கு உத்தரவிட்டார். தங்கம் எடை குறையும் உலகம் அல்ல என்றும் சிபிஐக்கு இது ஒரு அக்னி பரிட்சை என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon