பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை..!
சென்னை, செங்கல்பட்டு, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் அண்ணாசாலை, ஐயப்பன் தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கி நின்றது.
வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தால் அங்கு குளிர்ச்சியான சூழ நிலவியது. ஆத்தூர், நரசிங்கபுரம், தலைவாசல், கெங்கவல்லி உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. கடந்த இரண்டு வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.






