திருவாடானையில் கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்: 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. தங்களின் நீண்டகால கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி இந்த கவன ஈர்ப்பு காத்திருப்ப போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கிராம நிர்வாக அலுவலர் அலுவலகக் கட்டிடங்கள் பல இடங்களில் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. இதனால் பொதுமக்களும், அலுவலர்களும் பெரும் அச்சத்துடன் அலுவலகத்திற்கு வர வேண்டிய சூழல் நிலவுகிறது. இவற்றை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.
1984-ஆம் ஆண்டிற்குப் பிறகு VAO பணிக்கான கல்வித்தகுதி மாற்றப்படவில்லை. இன்றைய கல்வி வளர்ச்சியை கருத்தில் கொண்டு, குறைந்தபட்ச கல்வித்தகுதியை இளங்கலை பட்டப்படிப்பாக (Degree) உயர்த்த வேண்டும்.
10 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு தேர்வு நிலை கிராம நிர்வாக அலுவலர் என்றும், 20 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு சிறப்பு நிலை கிராம நிர்வாக அலுவலர் என்றும் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டும். என்பது உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்ப போராட்டம் நடந்தது. 30க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்
📱 Share on WhatsApp 𝕏 Share on X




