--- --:--:-- --

மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்! பரபரப்பு!

8

தமிழ்நாட்டை காப்பாற்ற அரசியலில் களம் இறங்குங்கள் என்ற வாசகங்களுடன் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜயின் வீடு மற்றும் படப்பிடிப்பு தளங்களில் கடந்த சில தினங்களுக்கு முன் வருமான வரி சோதனை நடைபெற்றது.

 

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இந்த சோதனை நடத்தப்பட்டது என அவரது ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. இந்த நிலையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் எனவும் மக்களின் நலனை காக்க வேண்டும் என்றும் ஆந்திராவின் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்டோர் கூறுவது போன்ற புகைப்படங்களுடன் கூடிய போஸ்டர்கள் மதுரை மாநகரில் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon