--- --:--:-- --

உத்தராகண்ட் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு..!

7

த்தராகண்ட் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. உத்தரகாசி சிகரத்தில் கடந்த 4ஆம் தேதி ஏற்பட்ட பனிச்சரிவில் 41 பேர் சிக்கினர். மலையேற்றப் பயிற்சி முடித்து கொண்டு திரும்பி கொண்டிருந்த பொழுது இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.

 

தகவலறிந்த எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்புப் பணியில் 30 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

 

இந்த நிலையில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. இன்று அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீட்பு பணிகளை உத்தரகாண்ட் முதலமைச்சர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.

 

Right Menu Icon