மனைவியின் இறப்பை தாங்க முடியாமல் சடலத்துடன் மூன்று நாட்கள் இருந்த கணவன் மற்றும் மகன்…!
மதுரையில் இறந்த மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் உடலுடன் கணவர் மற்றும் மகன்கள் மூன்று நாட்கள் இருந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மதுரை எஸ் எஸ் காலனி சேர்ந்த பாலகிருஷ்ணன் – மாலதி தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
மூத்த மகன் மருத்துவ படிப்பை முடித்து விட்ட நிலையில் இளைய மகனும் தேனி மருத்துவக் கல்லூரியில் பயின்று வருகிறான். இந்நிலையில் கடந்த ஏழாம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மனைவி உயிரிழந்ததால் அவரது உடலை வீட்டிற்கு எடுத்து வந்து கணவர் பாலகிருஷ்ணன் மற்றும் இரண்டு மகன்கள் குளிரூட்டப்பட்டியில் வைத்துள்ளனர்.
மாலதி உயிரிழந்த மூன்று நாட்களாகியும் உடலை அடக்கம் செய்யாததால் அக்கம் பக்கத்தினர் எழுதிய தகவலின் பெயரில் வந்த போலீஸ் சார் உடலை ஏற்று உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.





