நீட் தேர்வில் தோல்வி அடைந்த திருப்பூர் மாணவி தற்கொலை!!
திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த செல்வராஜ், ராஜலட்சுமி தம்பதியின் மகள் ரிதுஸ்ரீ(18) . இவர் ஜெய்வாய்பாய் மாநகராட்சி பள்ளியில் +2 படித்துமுடித்தார். அதில் 600 மதிப்பெண்ணுக்கு 490 மதிபெண்களே எடுத்திருந்த நிலையில். மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு எழுதியிருந்தார்.
இந்நிலையில் நடந்து முடிந்த நீட் தேர்வு ரிசல்ட் நேற்று மதியம் வெளியானது இதில் ரிதுஸ்ரீ தோல்வி அடைந்ததால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த திருப்பூர் தெற்கு போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




