இவனுகளுக்கு தமிழும் புரிய மாடிங்கிது..நான் என்னய்யா பண்றது…?
சர்ச்சை வளையத்தில் சிக்கியிருக்கும் நித்தியானந்தா புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு நகைச்சுவையாக விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார்.
பிரச்சினைக்கு மேல் பிரச்சினை வந்தாலும் எத்தனை பெரும் சர்ச்சையில் சிக்கினாலும் என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று கூலாக சொற்பொழிவாற்றி வருகிறார் நித்தியானந்தா.
பாலியல் வீடியோ தொடங்கி சமீபத்திய குழந்தை கடத்தல் புகார் வரை சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் நகர்ந்துகொண்டிருக்கிறது அவரின் வாழ்க்கைப் பயணம்.
இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் ஆன்லைனில் ஆன்மீக சொற்பொழிவாற்றுவதை மட்டும் நித்தியானந்தா நிறுத்தவில்லை. சர்ச்சை மேகங்கள் தன்னை சூழ்ந்து இருப்பது குறித்து சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் கொஞ்சம் ஜாலியாக பேசி இருக்கிறார் நித்யானந்தா.
தாம் பேசும் தமிழ் யாருக்குமே புரியவில்லை என கிண்டல் செய்திருக்கும் அவர்,அதை புரிந்துகொள்ளாமல் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விடுவதாக ஒருமையில் நகையாடி இருக்கிறார்.
காவல் துறையையே கலாய்த்து விட்டு சிரிப்பு பொங்க பேசியிருக்கும் நித்யானந்தா தமிழகத்தில் ஏதேனும் பிரச்சனையை மாற்றவேண்டும் என்றால் அதற்குத்தான் தான் குறி வைக்கப்படுவதாக கூறி பல புதிர்களை போட்டிருக்கிறார்.
பல சர்ச்சைகளுக்கு மௌனத்தையே பதிலாக அளித்து வந்த நித்தியானந்தா இம்முறை மௌனம் கலைந்து இருக்கிறார்.





