வேளாண் பல்கலைக்கழகத்தில் காவி உடையணிந்த திருவள்ளுவர் படம்..!
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் காவி உடையணிந்த திருவள்ளுவர் படம் வைக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அந்த படமாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக நூலகங்களில் காவி உடை அணிந்த திருவள்ளுவரின் உருவப்படம் வைக்கப்பட்டு உள்ளது. எந்த அடையாளத்தையும் குறிப்பிடாத வகையில் வெள்ளை உடையுடன் உள்ள திருவள்ளுவரின் படமே தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் காவி உடை அணிந்தவாறு உள்ள படம், நூலகங்களில் இருந்ததால் சர்ச்சை எழுந்தது.
அந்த திருவள்ளுவர் படம் 2017 ஆம் ஆண்டு வைக்கப்பட்டதாக பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் காவியுடை திருவள்ளுவர் படத்தை மாற்றி அரசால் அங்கீகரிக்கப்பட்ட வெள்ளை உடையணிந்த திருவள்ளுவர் படம் வைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.






