திருப்பத்தூர் எஸ்.பி. விஜயகுமாரை பாராட்டிய பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா !!!
வேலூர் மாவட்டத்தில் இருந்து சமீபத்தில் பிரிக்கப்பட்டு புதியதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர் மாவட்டத்தில் காவல்துறையிடம் அளிக்கும் புகார்களுக்கு சரியான நடவடிக்கை எடுக்கப்படுகிறதா, காவல்துறையினர் பணியின் தரம் எப்படி இருந்தது என்பது குறித்து புகார் தந்தவர்களிடம் கருத்து கேட்கப்படுகிறது. அவர்களின் கருத்துக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பாராட்டோ, அறிவுறுத்தலோ வழங்கப்படுகிறது.இதை செய்தது அந்த மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார்.

இதுகுறித்த ஒரு வீடியோவை இந்திய ஐ.பி.எஸ் சங்கத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் பகிர்ந்திருந்தது. இதை ரீட்வீட் செய்திருக்கும் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, “திருப்பத்தூர் எஸ்பியின் அற்புதமான இந்த முயற்சி காவல்துறை வேலை செய்யும் முறையை இன்னும் செறிவூட்ட, குடிமக்களின் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க இது உதவும்” என்று குறிப்பிட்டு ட்வீட் செய்து பாரட்டியுள்ளார்.
பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தமிழக எஸ்.பி ஒருவரை பாராட்டியுள்ள சம்பவம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.






