--- --:--:-- --

செல்போன் வெடித்து சிதறியதில் உயிரிழந்த இளைஞர்..!

4

குமரி மாவட்டத்தில் கட்டிலில் வைக்கப்பட்டிருந்த செல்போன் வெடித்து தலையணை மற்றும் மெத்தையில் தீப்பிடித்து ஏற்பட்ட புகையால் மதுபோதையில் படுத்திருந்த நபர் மூச்சுத்திணறி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

திருநெல்வேலி மாவட்ட நாங்குநேரியை சேர்ந்த சதீஷ் என்பவர் சக தொழிலாளர்கள் இரண்டு பேருடன் வீடு எடுத்து தங்கி பெயிண்டிங் வேலை செய்து வந்துள்ளார்.

 

தூக்கத்தில் செல்வ சதீஷ் தனது செல்போனை தலையணை அருகே வைத்திருந்ததாக கூறப்படும் நிலையில் செல்வ சதீஷ் அறையை விட்டு வெளியே வராததை அடுத்து சந்தேகம் அடைந்த சகத் தொழிலாளர் வெங்கடேசன் என்பவர் அறைக்கு சென்று பார்த்த பொழுது செல்வ சக்தி ஸ்ரீ தரையில் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

 

அவரது செல்போன் வெடித்த நிலையில் இருந்த மெத்தைகள் எரிந்து நாசமான நிலையிலும் கடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கடேஷ் இரணியல் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

 

Right Menu Icon