நடைமேடையில் மாறி நின்ற ரயில்.. சிக்கிய வீடியோ.. சஸ்பெண்ட் ஆன அதிகாரி..!
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ரயிலை நடைமேடையில் மாற்றி நிறுத்தியதாக ரயில்வே ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை அன்று ஒன்றாவது நடைமேடைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் இரண்டாவது நடைமேடைகள் நிறுத்தப்பட்டு மீண்டும் ஒன்றாவது நடை மேடைக்கு வந்தது.
இது தொடர்பாக ரயில் பயணிகள் சங்கத்தினர் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து சிக்னல் கட்டுப்பாட்டு அறை மேலாளர் பணியிடை நீக்கம் செய்து ரயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.





