தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும் : வானிலை மையம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 4 நாட்களுக்கு ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டு இருக்கிறது.
வடகிழக்கு பருவ மழை தொடங்கியிருக்கக்கூடிய சூழ்நிலையில் கடந்தாண்டை விட இந்த ஆண்டு இயல்பில் குறைவாக மழை பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் அந்த நாட்களுக்கு ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.





