--- --:--:-- --

இந்தி படிப்பதை தமிழக அரசு தடுக்கவில்லை.!

1

லகத்தில் ஹிந்தி மொழி படிப்பதை யாரும் தடுக்கவில்லை எனவும் இங்கு இருமொழிக் கொள்கையை பின்பற்றுவது என்பது கொள்கை முடிவு என்றும் உயர் நீதிமன்றத்தில் மாநில அரசு தெரிவித்துள்ளது.

 

புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழகத்தில் எதிர்ப்பு நிலவி வருவதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் அர்ஜுனன் இளையராஜா என்பவர் வழக்கு தொடர்ந்தார். பலதரப்பட்ட நிபுணர்களுடன் கலந்து பேசி உருவாக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கையை ஹிந்தி, சமஸ்கிருத மொழித் திணிப்பு எனக்கூறி எதிர்ப்பது நியாயமற்றது என்று அர்ஜுனன் இளையராஜா குறிப்பிட்டிருந்தார்.

 

தமிழகத்திற்கு புதிய தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதை விசாரித்த நீதிபதிகள் அமர்வு எந்த மொழியை கற்பிக்க வேண்டும் என்பதில் அரசு முடிவு எடுக்கலாம் என்ற போதும் இந்தி படிக்கும் வாய்ப்பில்லாததால் தமிழக மக்கள் பாதிக்கப்படக் கூடும் என்பதால் இந்த விவகாரத்தில் மக்களின் நலன் கருதி முடிவு எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

 

கர்நாடகாவும் ஆந்திராவும் மும்மொழிக் கொள்கையை பின்பற்றும் வகையில் தமிழகத்தில் அதை பின்பற்றுவதில் என்ன சிக்கல் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

 

இதற்கு பதிலளித்த மாநில அரசின் தலைமை வழக்கறிஞர் தமிழகத்தில் ஹிந்தி படிப்பதை யாரும் தடுக்க வில்லை எனவும் தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையை பின்பற்றுவது என கொள்கை முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். நான்கு வாரங்களில் பதிலளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon