--- --:--:-- --

நெஞ்சு வலியால் அவதிப்பட்ட மாணவர்.. ஆனாலும் தீவிர பயிற்சி கொடுத்த பயிற்சியாளர்..!

6

டலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான பிரசாந்த் என்ற இளைஞர் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான கடல்சார் பல்கலைக்கழக கழகத்தில் நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

 

கல்லூரி சார்பில் அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை ராணுவ வீரர்களுக்கு இணையான தீவிர பயிற்சி அளிக்கப்படுவது வாடிக்கையாக இருந்துள்ளது. அப்போது டியூட்டி ஆபிசர் புருஷோத்தமன் என்பவர் பிரசாந்துக்கு கடுமையான பயிற்சி கொடுத்துள்ளார்.

 

ஆனால் பிரசாந்த் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். ஆனாலும் தொடர்ந்து பயிற்சி கொடுத்ததால் ரத்த வாந்தி எடுத்த பிரசாந்த் உயிரிழந்து போனார். மாணவர் பலியானதை தொடர்ந்து சக மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Right Menu Icon