பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு.. உறவினர்கள் ஆர்ப்பாட்டம்..!
திருப்பத்தூர் அருகே பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிர் இழந்த நிலையில் அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவளம் பாளையம் பகுதியை சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரின் மனைவி கோமதிக்கு ஆண்டியப்பன் ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை பிறந்துள்ளது. அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கோமதி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் கோமதி உயிரிழந்ததாக கூறி அவரது உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.





