நின்றிருந்த லாரி தானாக பின்னோக்கி சென்று விபத்தை ஏற்படுத்தியுள்ளது..!
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியில் நின்றிருந்த லாரி ஒன்று தானாக இயங்கி விபத்தை ஏற்படுத்தி உள்ளது. லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுனர் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றதையடுத்து இந்த விபத்து நேர்ந்துள்ளது.
லாரியின் பின்னால் நின்று கொண்டிருந்த கார், இருசக்கர வாகனம் மற்றும் பழ கடைகள் சேதமானது. அக்கம்பக்கத்தினர் கூச்சலிடவே ஓட்டுனர் விரைந்து வந்து லாரியை நிறுத்தியுள்ளார்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது லாரியில் பழுது காரணமாக தானாகவே இயங்கி பின்னே சென்றது தெரியவந்தது.






