மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தலைமை ஆசிரியரை தரதரவென இழுத்து வந்த பெற்றோர்..!
எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளியிலிருந்து தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் சிவா ரெடி.
அந்த பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் திடீரென பள்ளிக்கு செல்ல மாட்டேன் என கூறி பெற்றோரிடம் கூறியுள்ளார்.
தலைமையாசிரியர் சிவா ரெடி தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக அவர் கூறவே ஆவேசம் அடைந்த பெற்றோர் சக மாணவர்களின் பெற்றோர் உடன் பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியரின் அறைக்கே சென்று தரதரவென வெளியே இழுத்து வந்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.






