--- --:--:-- --

பேக்கரிக்குள் நுழைந்து பெண் ஊழியரை கத்தியைக் காட்டி மிரட்டிய நபர்

1

திண்டுக்கல் மாவட்டம் முத்தனம் பட்டியில் பேக்கரியில் பணிபுரியும் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி தகராறு செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல்- பழனி சாலையில் முருகன் என்பவற்கு சொந்தமான பேக்கரி உள்ளது.

 

இங்கு பணிபுரியும் நாகலட்சுமி என்ற பெண் வழக்கம்போல வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த போது வெயிலடிச்சாம் பட்டியை சேர்ந்த சரவணன் என்பவர் கடைக்குள் நுழைந்து தகராறில் ஈடுபட்டார். கடையில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கியதுடன் கத்தியை காட்டியும் அந்த பெண்ணை மிரட்டினார்.

 

பின்னர் அங்கிருந்தவர்கள் சரவணனை வெளியே அழைத்து சென்றனர். இச்சம்பவம் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon