--- --:--:-- --

மூன்றாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர்..!

7

திருத்தனூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் மூன்றாவது படிக்கும் மாணவிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சிறுமி பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.

 

பள்ளிப்பட்டு பேரூராட்சிக்கு உட்பட்ட ஆஞ்சநேயர் நகரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 16 மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியராக செங்கல்வராயன் என்பவர் பணியாற்றி வருகிறார்.

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வரும் சமுதாயத்தை சேர்ந்த மாணவி ஒருவரை தலைமை ஆசிரியர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

 

மூன்றாவது படித்து வரும் மாணவியும் பள்ளிக்கு செல்லாமல் அவரது குடும்பத்துடன் வெளியூருக்கு சென்று விட்டார். போலீசார் தாமாக முன்வந்து சம்பவம் தொடர்பாக மாணவி மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக மாணவி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Right Menu Icon