20 ஆயிரம் கன அடிக்கு உயர்ந்த வெள்ளம்..!
கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து 20,000 கன அடியாக அதிகரித்து வருகிறது. கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 வாரமாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.
இதனால் கர்நாடக மாநிலத்தில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர் பார்க்கப்பட்டது. இரண்டு நாட்களுக்கு முன்பு அணைகளில் இருந்து வினாடிக்கு 23 ஆயிரத்து 500 கன அடி நீர் உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
இந்த இரண்டு நாட்களுக்குள் தமிழகத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று அதிகரிக்க தொடங்கி விட்டது. தமிழக எல்லையில் நேற்று வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. தற்போது 20 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




