பல் துலக்கும் போது பெண்ணிற்கு வாயில் குத்திய பிரஷ்.. அகற்றிய மருத்துவர்..!
புதுக்கோட்டை அருகே பல் துலக்கும் பொழுது பெண்ணிற்கு வாயில் குத்திய டூத் பிரஷை அகற்றிய மருத்துவர் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
கந்தர்வகோட்டை பகுதியைச் சேர்ந்த அந்த பெண் பல் துலக்கும்போது டூத் பிரஷ் தசை பகுதியில் குத்தி சிக்கி உள்ளது. எவ்வளவு முயன்றும் பிரஷை எடுக்க முடியாத நிலையில் அந்த பெண்ணை உறவினர்கள் கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கிருந்து இஎன்டி மருத்துவர் பாதிக்கப்பட்ட தசை பகுதியில் மயக்க ஊசி செலுத்தி பிரஷ்சை அகற்றியதோடு தசை பகுதியில் மயக்க ஊசியை செலுத்தி பிரஷை எடுத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





