--- --:--:-- --

கோவையில் ” தல ” அஜித் என்ன செய்தார் தெரியுமா ?

9464504b-ba38-411d-bfd2-4fa46ff3c765

கோவையில் நடைபெற்று வரும் துப்பாக்கி சுடுதல் போடியில் நடிகர் அஜித் கலந்துகொண்டுள்ளார். தமிழ்நாடு சூட்டிங் அசோசியேசன் சார்பாக துப்பாக்கி சுடுதல் போட்டி கோவை காலவர் பயிற்சி மையத்தில் உள்ள ரைபில் கிளப்பில் நடைபெற்று வருகிறது. கடந்த 28 ஆம் தேதி துவங்கிய இப்போது ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் நடிகர் அஜித் குமார் கலந்து கொண்டுள்ளதாக சில புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவியது.இந்நிலையில் இன்று காலை நடைபெற்ற 10 எம்.ஏர் பிஸ்டல் போட்டியில் சென்னை ரைபில் கிளப் சார்பாக திரைப்பட நடிகர் அஜித் குமார் கலந்து கொண்டார்.

இந்த போட்டியில் செய்தி சேகரிக்க காவலர் பயிற்சி மைதானத்தில் பத்திரிக்கையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. தற்போது அஜித் குமார் போட்டியில் கலந்து கொண்டு சென்ற போது ரசிகர்கள் எடுத்த வீடியோக்கள் மற்றும் வெளியாகி உள்ளது.இந்த போட்டோஸ்,வீடியோஸ் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon