பாஜகவின் திணிப்புகளை தமிழகம் ஏற்காது: கனிமொழி
கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழ் பயிற்றுவிக்கப்படுகிறது என்ற தரவுகளை அண்ணாமலை தர முடியுமா? என MP கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்திலுள்ள KV பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இல்லை என்பது அண்ணாமலைக்கு தெரியாதா என வினவிய அவர், தமிழக மாணவர்கள் மீது அக்கறையுள்ள பாஜக அரசு கல்வி நிதியை ஏன் நிறுத்தி என்றும் சாடினார். மேலும், பாஜகவின் அவதூறுகள், திணிப்புகளை தமிழகம் ஒருபோதும் ஏற்காது என்றார்.






