--- --:--:-- --

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று மீண்டும் தொடங்குகிறது..!

4

மிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று மீண்டும் தொடங்குகிறது, சொத்து வரி உயர்வு, நீட்தேர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகள் எழுப்ப அதிமுக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 18ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கலானது. 24ஆம் தேதி வரை விவாதம் நடந்தது அமைச்சர்கள் பதில் உரைக்கு பிறகு சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

 

இந்த நிலையில் துறைவாரியான மானியக் கோரிக்கையை நிறைவேற்ற சட்டசபை கூட்டம் இன்று மீண்டும் கூடுகிறது. முதல் தினமான இன்று நீர்வள மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இதில் திமுக அதிமுக சட்டமன்ற கட்சிகளின் உறுப்பினர்கள் பேசுவார்கள். இறுதியில் அமைச்சர் துரைமுருகன் பதிலளித்து பேசுவார்.

 

இதேபோல ஒவ்வொரு நாளும் துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும். இந்த நிலையில் சொத்து வரி உயர்வு, நீட்தேர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை, திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப அதிமுக, பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

 

Right Menu Icon