மாநில உரிமைகளை தமிழக அரசு பாஜகவிடம் அடகு வைத்துவிட்டது..!
மாநில உரிமைகளை தமிழக அரசு பாஜகவிடம் அடகு வைத்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நடுக்காவுவில் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் தமிழக மேலிடப் பார்வையாளர் தினேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய அக்கட்சியின் மாநில தலைவர் அழகிரி இந்திய பொருளாதாரத்தை மத்திய பாஜக அரசு சிதைத்து விட்டதாகவும், வேளாண் சட்டத்தால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாழ்வளிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.






