வட மாவட்டங்களில் கனமழை: காஞ்சி, செங்கல்பட்டு, வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை மற்றும் வடமாட்டங்களில் நேற்றி இரவு முதல் கனமழை பெய்து வருவதால், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களிலும் கன மழை கொட்டி வருகிறது.

 

வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது.சென்னை மற்றும் புறநகரிலும் நேற்றிரவு முதல் விட்டு விட்டு கன மழை பெய்து வருகிறது. கன மழை காரணமாக வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன மழை காரணமாக, சென்னை பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கிடையே வட கிழக்கு பருவ மழையின் தீவிரத்தால், அடுத்த இரு நாட்களுக்கு | தமிழகம் முழுவதும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.மேலும், வரும் 30-ந் தேதி முதல் டிசம்பர் 7-ந் தேதி வரை தமிழகம் முழுவதும் பரவலாக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.