டாஸ்மாக் பணியாளர்களுக்கான ரூ.2,000 ஊதிய உயர்வு அமல்!

டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலை கூடுதலாக ரூ.10 அல்லது அதற்கு மேல் விற்பனை செய்த புகாரில் சிக்கிய 451 பணியாளர்களைத் தவிர, அனைத்து டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.

 

மேலும், மதுபாட்டிலை கூடுதலாக ரூ.10 அல்லது அதற்கு மேல் விற்பனை செய்து விதி மீறலில் ஈடுபட்ட 451 ஊழியர்களுக்கு ரூ.1,000 ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.


பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.2,000 ரொக்க பணம்..!

வ்வொரு ஆண்டும் தமிழர்களின் பழம்பெரும் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் விழாவாகப் பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

இந்நாள் உழவர்களின் அறுவடைத் திருவிழாவாகவும், இயற்கைக்கும், உழவர்களுக்கும் அவர்தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாகவும் தமிழர்களால் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில், 2025-ஆம் ஆண்டு தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

 

இதன் மூலம் 2,20,94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள். இதனால் அரசுக்கு ரூபாய் 249.76 கோடி செலவு ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.2000 ரொக்கப்பணம் வேண்டுமென முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

 

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பது, தமிழ்நாட்டு மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

 

இந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் ஃபெஞ்சல் புயல், அதிகனமழை உள்ளிட்டவற்றால், அனைத்து மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய உடமைகள் எல்லாம் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. தமிழ்நாடு அரசு அறிவித்த நிவாரணத் தொகைக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது.

 

இதன்மூலம் ஏற்பட்ட இழப்பினைச் சரி செய்வதற்கே அவர்களுக்கு இரண்டு, மூன்று ஆண்டுகள் தேவைப்படும். இதனால் தமிழக மக்கள் பெருத்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள்.இந்த நிலையில், தி.மு.க. அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பின்மூலம், பொங்கல் திருநாளை விமரிசையாகக் கொண்டாட முடியாத நிலை தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

 

தமிழக மக்கள் 2025 பொங்கல் திருநாளை சிறப்புறக் கொண்டாடும் வகையில், எவ்வித பாகுபாடின்றி, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் குறைந்தபட்சம் 2,000 ரூபாய் ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் தொகுப்பினை வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மகளிருக்கு மாதம் ரூ.2,100 உதவித்தொகை: பாஜக

ஜார்க்கண்டில் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2,100 உதவித்தொகை வழங்கப்படும் என பாஜக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. ஜார்க்கண்ட் சட்டசபையின் பதவிக்காலம் 2025 ஜன.5ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அங்கு விரைவில் தேர்தல் நடக்கவுள்ளது.

 

இந்நிலையில், மகளிருக்கு மாதம் ரூ.2,100 உதவித்தொகை, அனைத்து குடும்பங்களுக்கும் ஆண்டுதோறும் பண்டிகைக் காலங்களில் 2 சிலிண்டர் இலவசம் என பாஜக முக்கிய வாக்குறுதிகளை அளித்துள்ளது.


தண்ணீரை வீணாக்கினால் ரூ.2,000 அபராதம்..!

டெல்லியில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் லாரியில் வந்த தண்ணீரை பிடிக்க மக்கள் ஆபத்தான முறையில் முண்டியடித்துக் கொண்டு ஓடிய வீடியோ வெளியாகியுள்ளது.

 

கடுமையான வெப்பம் வரும் சூழலில் ஹரியானா டெல்லிக்கு தர வேண்டிய தண்ணீரை விடுவிக்காததால் கட்டுப்பாடு நிலவுகிறது. டெல்லியில் மக்கள் தண்ணீருக்காக அல்லல்படும் சூழலை உருவாக்கி உள்ள நிலையில் தண்ணீரை வீணடிப்பவர்களுக்கு 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சமீபத்தில் அந்த மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது.

 

இந்த நிலையில் லாரிகள் வந்த தண்ணீரை பிடிக்க மக்கள் முண்டியடித்த காட்சி தண்ணீர் இன்றி மக்கள் படும் பாட்டை காட்சிப்படுத்தியது.

 


இல்லத்தரசிகளுக்கு ரூ.2,000.. கர்நாடக அரசு வெளியிட்ட அறிக்கை..!

ர்நாடகாவில் மாதந்தோறும் 2,000 ரூபாய் உதவித்தொகை பெறும் இல்ல தரசிகள் குறித்த வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. கர்நாடக காங்கிரஸ் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் அந்தியோதயாத் திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

 

அவர்களுக்கு 2000 ரூபாய் வழங்கப்படும் எனவும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ரேஷன் அட்டை மேலுள்ள ரேஷன் அட்டைகள் என இரு வார்டுகளிலும் உறுப்பினராக உள்ள வயது மூத்த பெண்களுக்கு 2000 ரூபாய் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டிருக்கிறது. ரேஷன் கார்டுகள் வங்கி கணக்கில் இணைக்கப்பட்டு நேரடியாக பண வரவு வைக்கப்படும் எனவும் அமைச்சர் லக்ஷ்மி தெரிவித்துள்ளார்.

 

85 சதவீதம் பெண்கள் இதன் மூலம் பலன் அடைவார்கள் என்றும், பயன்பாட்டு இணைப்பு ஆகியவற்றை ரேஷன் கார்டுகளில் செய்ய முடியாது எனவும் பெண்கள் இல்லாத குடும்பத்தில் வயது மூத்த ஆண்கள் குடும்ப தலைவர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

 


குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 – காங்கிரஸ் வாக்குறுதி

ர்நாடக சட்டமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி பல்வேறு இலவச திட்டங்களை வாக்குறுதியாக அறிவித்துள்ளது. பாஜக ஆட்சியைப் பிடித்த டி.கே. சிவக்குமார் தலைமையிலான கட்சி தீவிரமாக தரை இறங்கியுள்ளது.

 

காங்கிரஸ் வெற்றி பெற்றால் ஏழை மக்களுக்கு மாதம் 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்று காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்தராமையா கடந்த வாரம் அறிவித்தார். அனைத்து பிரிவினருக்கும் மாதம் 200 யூனிட்டில் மின்சாரம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி ஏற்கனவே அறிவித்திருந்தது.

 

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு மாதமும் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் 2,000 ரூபாய் உதவி தொகை அளிக்கப்படும் என்ற பிரியங்கா காந்தி, பெங்களூருவில் நடந்த பொதுக் கூட்டத்தில் அறிவித்தார்.

 

இந்த திட்டத்தின் மூலம் ஒன்றரை கோடி குடும்ப தலைவிகள் பயன்பெறுவார்கள் என்று கர்நாடக காங்கிரஸ் கமிட்டி கூறியுள்ளது.

 


செல்பி எடுத்தால் ரூ.2,000 அபராதம்..!

சென்னை ரயில்வே தண்டவாளத்தில் நின்று செல்பி எடுப்பதற்கு 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. கடந்த ஓராண்டில் புறநகர் ரயிலில் இருந்து உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 200 ஐ தாண்டியுள்ளது.

 

இதையடுத்து படியில் தொங்கியபடி பயணம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. தெற்கு ரயில்வே நிர்வாகம் படியில் பயணம் செய்பவர்களுக்கு 3 மாத சிறை தண்டனையும் 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

 

மேலும் தண்டவாளங்களில் நின்று செல்பி எடுப்போர் மீது இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2,500 ரூபாய் அறிவிப்பு..!

ரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த ஆண்டு பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சேலம் இரும்பாலையில் அம்மாவின் மினி கிளினிக்கை திறந்து வைத்துப் பேசிய அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

ஒவ்வொரு அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு 4ஆம் தேதியில் இருந்து இந்த திட்டம் அமல்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

 

5 கோடியே 6 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2,500 பணத்தோடு ஒரு கிலோ அரிசி, சர்க்கரை ஒரு கிலோ, கரும்பு, திராட்சை 20 கிராம், முந்திரி 20 கிராம், ஏலக்காய் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.


ஊரடங்கு உத்தரவால் புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 உதவித்தொகை!

கொரொனா வைரஸ் பாதிப்பு காரணமாக புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2000 ரூபாய் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என அம்மாநில முதல் அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

 

சட்டப்பேரவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரொனா தடுப்பு நடவடிக்கையால் அமைப்பு சாரா தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், விவசாயிகள், மீனவர்கள், கூலி வேலை செய்பவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வேலையிழந்து இருப்பதாக குறிப்பிட்டார்.

 

இதனை கருத்தில் கொண்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 2000 ரூபாய் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி கூறினார். விரைவில் அவரவர் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

3 லட்சத்து 44 ஆயிரம் கோடி அட்டைதாரர்களுக்கு உதவித்தொகை வழங்குவதன் மூலம் அரசுக்கு 68 கோடியே 88 லட்சம் ரூபாய் கூடுதலாக செலவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.