இனி வால்பாறைக்கும் இ- பாஸ் கட்டாயம்..!

ட்டி, கொடைக்கானலை தொடர்ந்து தற்போது வால்பாறைக்கும் இபாஸ் கட்டாயம் என்ற நடைமுறை அமலுக்கு வரவுள்ளது. சமீப காலமாகவே சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விடுமுறை நாட்களில் சுற்றுலாதலங்களில் கூட்டம் அலைமோதுகின்றது.

 

இதனால் தான், ஊட்டி, கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சென்னை ஐ.ஐ.டி மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம் நிறுவனங்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு, நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தன.

 

அப்போது, ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம் குழுவின் இடைக்கால அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த அறிக்கையில், ஊட்டிக்கு செல்லும் தனியார் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். அரசு போக்குவரத்தைப் பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. மேலும், வரும் டிசம்பர் மாதம் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என ஐ.ஐ.டி – ஐ.ஐ.எம் குழுவினர் தெரிவித்தனர்.

 

இதையடுத்து, ஐ.ஐ.டி – ஐ.ஐ.எம் குழுவினருக்கு தேவையான தகவல்களையும், ஆலோசனைகளையும் வழங்க ஏதுவாக தலைமைச் செயலாளர் தலைமையில் விரைவில் கூட்டம் கூட்ட வேண்டும் என அரசுத் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அக்டோபர் 31 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

 

மேலும், ஊட்டி, கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வால்பாறையில் குவிந்து வருவதாக நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், ஊட்டி, கொடைக்கானலை விட, வால்பாறை, டாப் சிலிப், ஆனைமலை புலிகள் காப்பகம் ஆகியன சுற்றுச்சூழல் ரீதியாக தீவிரமான பகுதிகள்.
அதனால், வால்பாறை செல்லும் அனைத்து வழிகளிலும் சோதனைச் சாவடிகளை அமைத்து, இ-பாஸ் வழங்கும் நடைமுறையை நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

 

மேலும், வால்பாறை செல்லும் வாகனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றனவா என்பது குறித்தும் சோதனை நடத்த உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 31 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். வால்பாறை செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகள் இனி முன்கூட்டியே தமிழக அரசின் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் epass.tnega.org என்ற இணையதளம் மூலம் இ-பாஸ்பெற வேண்டும்.

 

வாகன விவரங்கள், பயணிகள் எண்ணிக்கை போன்றவை பதிவு செய்தால் அனுமதி வழங்கப்படும். இதனால் கட்டுப்பாடற்ற சுற்றுலா தடுக்கப்படும். போக்குவரத்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மேம்படும் எனக் கருதப்படுகிறது.


இனி ATM-ல் பணம் எடுத்தால் கூடுதல் கட்டணம்..!

டிஎம் மையங்களில் கார்டுகளைப் பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் சேவைகளுக்கான கட்டணங்களை மத்திய ரிசர்வ் வங்கி மாற்றியமைத்துள்ளது. ஒரு வங்கிக் கணக்கில் இருந்து, மற்றொரு வங்கியின் ஏ.டி.எம்.-ல் பணம் எடுப்பதற்கான கட்டணம் ரூ.17-ல் இருந்து, ரூ.2 அதிகரிக்கப்பட்டு ரூ.19-ஆக நிர்ணயிக்க வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ., ஒப்புதல் வழங்கி உள்ளது.

 

மேலும் இலவச பரிவர்த்தனை எண்ணிக்கை தாண்டினால் மே 1ஆம் தேதி முதல் கூடுதலாக ரூ.2 வசூலிக்கப்படும்.அதாவது அதே வங்கி ஏடிஎம் கார்டை பயன்படுத்தி இலவச பரிவர்த்தனைக்கு மேல் பணம் எடுத்தால், அதற்கான கட்டணம் ரூ.21-லிருந்து ரூ.23ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

 

ஒருவர் அவருடைய சொந்த வங்கி ஏடிஎம்மில் மாதம் 5 முறை இலவச பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடதக்கது.அதைப்போல, பிற வங்கி ஏடிஎம்களில் மெட்ரோ நகரமாக இருந்தால் மாதம் 3 முறை கூடுதலாக இலவச பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.

 

மெட்ரோ நகரமல்லாத பிற பகுதிகளாக இருந்தால் மாதம் 5 முறை இலவச பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.பணம் எடுப்பது மட்டுமல்லாமல், இருப்பைச் சரிபார்ப்பது மற்றும் மினி ஸ்டேட்மென்ட் எடுப்பது உள்ளிட்டவையும்கூட ஒரு பரிவர்த்தனையாகக் கணக்கில் கொள்ளப்படும்.

 

அந்த வகையில், பேலன்ஸ் சோதித்தல், மினி ஸ்டேட்மென்ட் எடுத்தல் ஆகியவற்றுக்கு, ரூ.1 அதிகரிக்கப்பட்டு, ரூ.6-ல் இருந்து ரூ.7-ஆக கட்டணம் உயரும் எனத் தெரிகிறது.


இனி பிறப்பு, இறப்பு சான்றிதழ் வீடு தேடியே வரும்..!

வீடு தேடி பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கும் திட்டம் தமிழகத்திலேயே முதன்முறையாக தஞ்சையில் தொடங்கப்பட்டுள்ளது . பிறப்பு இறப்பு சான்றிதழ்களை அவரவர் வீடுகளுக்கு நேரடியாக தபால் மூலம் வழங்கும் திட்டத்தை தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் ராமநாதன் தொடங்கி வைத்தார்.

 

பொதுமக்கள் அலைவதை தடுக்கும் பொருட்டு அவரவர் வீடுகளுக்கே தபால் மூலம் சான்றிதழ்கள் அனுப்பப்படும் என்றும் இதனால் மக்கள் அலைக்கழிக்கப்படுவது தவிர்க்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

கட்டணத்தை மாநகராட்சி நிர்வாகமே ஏற்றுக்கொள்ளும் என்றும் பொதுமக்களிடம் இருந்து எந்த கட்டணமும் வசூலிக்க படாது எனவும் கூறினார்.

 


இனி பள்ளிகள் அரை நாள் மட்டுமே செயல்படும்.. அரசு அறிவிப்பு..!

கோடை காலத்தை ஒட்டி தெலுங்கானாவில் பள்ளிகள் அரை நாள் மட்டுமே செயல்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. கோடை காலம் தொடங்கும் முன்பே, நாட்டின் பல நாடுகளில் வெப்பம் வாட்டி வதைக்கிறது.

 

இந்த உலகில் கோடை காலத்தை ஒட்டி தெலுங்கானாவில் பள்ளிகள் அரை நாள் மட்டுமே செயல்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

 

அப்போது வருகின்ற அதன்படி வருகின்ற 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 23ஆம் தேதி வரை பள்ளிகள் அரை நாள் மட்டுமே செயல்படும் என்றும் மாணவர்களின் நலன் கருதி காலை எட்டு மணி முதல் நண்பகல் 12:30 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.