ரூ.70,000-த்தை கடந்த தங்கம் விலை..!

ங்கம் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்ற நாடுகள் மீது வரி விதித்ததால், கடந்த சில நாட்களாக தங்கம் விலை உச்சம் தொட்டது. மீண்டும் இந்த வரிகளை டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளதால், பங்குச்சந்தை மீண்டும் ஏற்றம் காணும் என எதிர்பார்க்கப்பட்டது.

 

இந்த நிலையில், முதலீட்டாளர்கள் சிலர் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாகக் கருதுவதால், தங்கத்தின் தேவை அதிகரித்து, தங்கம் விலையும் கூடி வருகிறது.நேற்று (ஏப்ரல் 11) தங்கம் விலை கிராமுக்கு ரூ.185 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8,745-க்கும், சவரனுக்கு ரூ.1,480 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.69,960-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 12) தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8,770-க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.70,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல, 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.7,265-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.160 உயர்ந்து, ரூ.58,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

மேலும், வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ. 2 அதிகரித்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.110-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,10,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


மகளிர் உரிமைத்தொகை போல் விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000!

களிர் உரிமைத்தொகை போல் மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசு வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் போட்டு வருகிறது.

 

விவசாயத்தையும் விவசாயிகளையும் ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்கிறது. கடந்த 2023-2024-ம் நிதியாண்டில் ரூ.38,904 கோடி வேளாண் துறைக்கு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2024-25ம் நிதியாண்டில் மொத்த வேளாண் பட்ஜெட் மதிப்பீடு ரூ.42,281.88 கோடி ஒதுக்கப்பட்டது.

 

2023-2024-ம் ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியை விட 2024-25 நிதியாண்டில் ரூ.3,377 கோடி இது அதிகம்.இதற்கிடையே 2025-2026ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் வருகிற 15ம் தேதி தமிழக சட்டப்பையில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கான தயாரிப்பில் வேளாண் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக, வேளாண் பட்ஜெட்டில் என்னவெல்லாம் இடம் பெற வேண்டும், விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் குறித்து தமிழக அரசு பல்வேறு தரப்பினரிடம் கருத்து கேட்டது.

 

இந்த கருத்துக்களின் அடிப்படையில் விவசாயிகள் வைத்த கோரிக்கை விவரங்கள் வெளியாகியுள்ளன.அதன்படி, விவசாயிகள் நலனைப் பேணும் வகையில் இன்சூரன்ஸ் திட்டம் கொண்டுவர வேண்டும், விவசாயம் செய்யும்போது உயிரிழந்தால் ரூ.25 லட்சம் வழங்கும் சிறப்பு திட்டம் ஆகியவை விவசாயிகளின் பிரதான கோரிக்கையாக இருந்தன.

 

இதேபோல் விவசாயத்தை நம்பி இருக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை போல், அவர்களின் வாழ்வாதாரத்தை காக்க மாதந்தோறும் ரூ.3,000 உதவித் தொகை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், விவசாயிகள் தங்களுடைய விளைபொருட்களை விலையில்லா அல்லது மானிய விலையில் குறிப்பிட்ட நேரத்தில் கொண்டு செல்ல தனி பஸ்கள் மற்றும் கொரியர் சேவைகள் அறிமுகம் செய்ய வேண்டும்.

 

இதுதவிர இயற்கை விவசாயத்துக்கு முக்கியத்துவம், உரக்கடை வைக்க மானியம், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4400, நெல் குவிண்டாலுக்கு ரூ.3100 சத்தீஸ்கர் மாநிலத்தில் வழங்கப்படுவது போல் தமிழகத்திலும் வழங்க வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் வைத்துள்ள கோரிக்கைகளை தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவிக்குமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


9-12ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1,000..!

த்திய அரசின் தேசிய வருவாய்வழி, திறன் படிப்பு உதவித் தொகை திட்டத்தின்கீழ் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 9-12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை அளிக்கப்படுகிறது.

 

இதற்காக 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு, நமது மாநிலத்தில் இருந்து 6,695 பேர் உள்பட 1 லட்சம் பேர் தேர்வு செய்யப்படுவர். இந்தத் தேர்வுக்கு தலைமை ஆசிரியர் மூலம் ஜன.24க்குள் விண்ணப்பிக்கலாம்.


ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000..!

ன.14 பொங்கல் கொண்டாடப்பட உள்ளதையொட்டி, 2.21 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு TN அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குகிறது. அதன்படி, கார்டுதாரர்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு, ரூ.1,000 ரொக்கம் அடங்கிய தொகுப்பு வழங்க அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 

இதற்காக கார்டுதாரர்கள், செலவு உள்ளிட்ட கணக்கெடுப்பு நடந்து வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.


ரூ.3,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது..!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே பட்டா திருத்தம் செய்வதற்கு 3000 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

சீரமங்கலத்தைச் சேர்ந்த புஷ்பா என்பவர் தனது விளை நிலத்திற்கு பட்டா திருத்தம் செய்வதற்காக சீயமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் ரமேஷிடம் விண்ணப்பித்திருந்தார். அதற்கு அவர் 3,000 ரூபாய் லஞ்சம் கேட்டதால் திருவண்ணாமலை மாவட்டம் லஞ்ச ஒழிப்புத்துறையில் தகவல் தெரிவித்துள்ளார்.

 

அவர்கள் கொடுத்த ரசாயனம் தடவிய 3000 ரூபாய் லஞ்ச பணத்தை அளித்துள்ளார். அதை அவர் வாங்கிய பொழுது லஞ்ச ஒழிப்பு துறையினர் மறைந்திருந்து பிடித்தனர். 7 மணி நேரம் விசாரணைக்கு பிறகு ரமேஷை கைது செய்தனர்.

 


காணாமல் போன ஸ்ப்ளெண்டர் பைக்..கண்டுபிடித்து தருபவருக்கு ரூ.10,000

துரையை சேர்ந்த நபர் காணாமல் போனது தனது பைக்கை கண்டுபிடித்துக் கொடுத்தால் பத்தாயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என 4,500 செலவு செய்து ஆங்காங்கே போஸ்டர் ஒட்டியுள்ளார்.

 

மதுரை மாவட்டம் காளவாசல் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் மாநகராட்சியில் பணிபுரிந்து வருகிறார். இவ்வாறு கடந்த 12ஆம் தேதி திருடு போனதால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

காணாமல் போன தனது பைக்கை கண்டுபிடித்துக் கொடுத்தால் 10 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என 4500 செலவு செய்து ஆங்காங்கே போஸ்டர் ஒட்டி உள்ளார்.

 

தன்னுடைய அம்மா நினைவாக அந்த பைக் தனுடன் இருந்தது என்றும் தாயின் பாசத்திற்கும் எதுவும் ஈடு இல்லை எனவும் உருக்கமாக கூறியுள்ளார். மேலும் பைக்கை கண்டுபிடித்து தருபவர்களின் குடும்பத்திற்கு தீபாவளிக்கு புத்தாடை வாங்கி தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

 


ரூ.1,000 எப்படி கொடுப்பேன் என ஹெல்மெட்டை தரையில் போட்டு அழுத நபர்..!

சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனை இதர போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த நபர் ஹெல்மெட் அணியாததால் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.

 

இதனால் ஆத்திரமடைந்த வாகன ஓட்டி போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 


தியாகிகள் பென்சன் ரூ.21,000ஆக உயர்வு..!

தியாகிகள் பென்சன் ரூ.21,000ஆக உயர்த்தப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முன்னதாக, அவர்களுக்கான பென்சன் தொகை ரூ.20,000ஆக இருந்தது.

 

விடுதலைப் போராட்ட வீரர்களின் குடும்பங்களுக்கான ஓய்வூதியம் ரூ.11,000ல் இருந்து ரூ.11,500ஆக உயர்த்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் 78ஆவது சுதந்திர தினத்தையொட்டி, கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றிய அவர், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.


திருப்பூரில் வீட்டின் கதவை உடைத்து திருட்டு..குற்றவாளிக்கு 6 ஆண்டு சிறை மற்றும் ரூ.10,000 அபராதம்..!

திருப்பூரில் மத்திய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டின் கதவை உடைத்து பொருட்களை திருடிய நபருக்கு ஆறு வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது.

 

கடந்த மே 17ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை இடைப்பட்ட காலத்தில் திருப்பூர் மாநகரம் மத்திய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆண்டிபாளையம், குறிஞ்சி நகர், அண்ணாமலையார் நகர் பகுதியில் சதிஷ்குமார்(52) என்பவரின் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து பொருட்களை திருடிய நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த சட்டநாதன்(40), என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு வழக்கு விசாரணையில் இருந்து வந்தது.

 

இந்த வழக்கு இன்று திருப்பூர் நீதித்துறை நடுவர்- நீதிமன்றத்தில் அனைத்து தரப்பு சாட்சிகளின் விசாரணை முடித்து, நீதித்துறை நடுவர் பழனிகுமார். குற்றவாளி சட்டநாதன் என்பவருக்கு இரண்டு பிரிவுகளின் கீழ் தலா மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து தண்டனையை தனித்தனியாக அனுபவிக்குமாறு தீர்ப்பு வழங்கினார்.

 

இவ்வழக்கின் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, நீதிமன்றத்தில் இறுதியறிக்கை தாக்கல் செய்து வழக்கை சிறப்பாக கையாண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த காவல் ஆளினர்களை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் லஷ்மி வெகுவாக பாராட்டினார்.